உத்தரப் பிரதேசம் முதல்வர் யார்? இன்று முடிவு!!
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலில், மூன்று மாநிலங்களில் வென்று பாஜக புதிய சாதனை படைத்துள்ளது. இதில், உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களுக்கான முதல்வரை ஏற்கெனவே அந்தக் கட்சி அறிவித்துவிட்டது.
தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் குறித்து அறிவிப்பு வெளிவராத நிலையில், இன்று தகவல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கான போட்டியில் தற்போது வரை மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹாவும், உத்தரப்பிரதேச பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மெளரியா ஆகியோரும் உள்ளனர். லக்னோவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்துக்கு அருகில் உள்ள ஸ்மிரிதி உப்வான், அரங்கில் இதற்கான தகவல்கள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. பெரும்பாலும் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.