இரண்டு நாள் பயனமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொண்டார். இந்த பயனத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி குஜராத் மாநிலம், பழைய துவாரகா மற்றும் புதிய துவாரகா நகரை இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்கு தொங்கும் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அடிகல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மோடி தெரிவித்ததாவது,


’ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் மூலம் நாட்டு மக்களுக்கு முன்னதாகவே தீபாவளி வந்துவிட்டது. நல்ல நோக்கத்திற்காக கொள்கைகள் பலவற்றை அரசு கொண்டுவரும் போது, மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்தார்.


பிரதமரின் இந்த இரண்டு நாள் பயனத்தில் இந்த அடிக்கல்நாட்டு விழாவிற்கு பின்னர்அங்கிருந்து ஓஹா நகருக்கு இடையே பாலம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கின்றார். பின்னர் அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.


ராஜ்கோட்டில் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைப்பது, ராஜ்கோட்-ஆமதாபாத் இடையே 6-வழி சாலை, ராஜ்கோட்-மொர்பி இடையே 4-வழி சாலை அமைப்பது போன்ற திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கின்றார். மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆரம்ப புள்ளியா இந்த பயனம் அமையும் என கூறப்படுகிறது.


இறுதியாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றப்பின் நாளை அவர் டெல்லி திரும்புகிறார்.