ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை தொடர் சீனாவின் ஷாங்காயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 21 வயதான இந்தியாவின் தீபிகா குமாரி உலக சாதனையை சமன் செய்து அசத்தினார். மகளிர் ரீகர்வ் ரேங்கிங் சுற்றில் களமிறங்கிய தீபிகா, 686/720 புள்ளிகள் குவித்து தென் கொரியாவின் கி போபே படைத்த சாதனையை சமன் செய்து அசத்தினார். தீபிகாகுமாரி  ஏற்கனவே ரியோ ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் மற்றும் குழு பிரிவில் தகுதி பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் ஏற்கனவே தொடர்ந்து நடந்த உலக கோப்பை வில்வித்தை தொடர்களில் வெள்ளிப் பதக்கம் மூன்று முறை 2011, 2012, 2013 வென்றுள்ளார்.