ஹைதராபாத், சம்பல் சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா!
ஹைதராபாத், சம்பலில் நடந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தனக்கு ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருத்தம்!!
ஹைதராபாத், சம்பலில் நடந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தனக்கு ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருத்தம்!!
டெல்லி: ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் மற்றும் உத்தரபிரதேசத்தின் சம்பலில் ஒரு இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாம்சாபாத்தில் சுங்கச்சாவடி அருகே 26 வயதான கால்நடை பெண் மருத்துவர், 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்தக் கொடூர கும்பல் அவரது உடலையும் தீ வைத்து எரித்தது. கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற அந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பெண் மருத்துவரின் இருசக்கர வாகன டயரை பஞ்சராக்கி விட்டு, அவருக்கு உதவி செய்வது போல் நடித்து, கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக லாரி ஓட்டுநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திர்க்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத், சம்பலில் நடந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தனக்கு ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவங்கள் பற்றி பேசுவதை விட தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வலியுறுத்தினார். இந்த சம்பவங்கள் மனநிலையைத் தூண்ட வேண்டும் என்றும் வன்முறை மற்றும் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் பெண்கள் தினசரி மிருகத்தனத்தை எதிர்கொள்ளக் கூடாது என்றும் பிரியங்கா கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; "ஹைதராபாத்தில் இளம் கால்நடை மருத்துவர் மற்றும் சம்பலில் சிறுமி ஆகியோரைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததால் நான் மிகவும் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.
ஒரு சமூகமாக, இந்த கொடூரமான சம்பவங்கள் நடக்கும் போது பேசுவதை விட நாம் அதிகம் செய்ய வேண்டும். பெண்கள் தினசரி அடிப்படையில் கொடுமைப்படுத்தப்படுவதை வெறுக்கத்தக்க விதத்தில் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கும், வன்முறையை நிராகரிப்பதற்கும், மாற்றுவதற்கும் நம் மனநிலையைத் தூண்ட வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.