ஆர்எஸ்எஸ் அமைப்பை அவதூறாக ராகுல் பேசவில்லை -சுப்ரீம் கோர்ட்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், சில நாட்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். தான் என பேசினார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது பேசிய ராகுல் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ஆர்.எஸ்.எஸ் குற்ற அமைப்பு என்பது போல் ராகுல் அவதூறாக பேசவில்லை என்றார். அதனை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ராகுலின் பேச்சை ஆய்வு செய்ததில் அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி அவதூறாக பேசவில்லை என்பது தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் தான் கொலை செய்ததாக மட்டுமே பேசி உள்ளார். காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான் என குறிப்பிட்டு யாரையும் சொல்லி குற்றம்சாட்டவில்லை என்றார்.
இவ்வழக்கில் ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்துள்ளது.