காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பயணம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் இராணுவ சிப்பாய்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 



இந்நிலையில், புதிய யூனியன் பிரதேசமான லடாக் பகுதிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று  இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.