நியூடெல்லி: டெல்லியில் பள்ளிச் சிறுமி மீது ஒரு சிறுவன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் துவாரகா மாவட்டத்தில், பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கவலைகளை அதிகரித்துள்ளது. இந்த ஆசிட் வீச்சு சம்பவம் காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சிறுமி, சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.



பட்டப்பகலில் பள்ளி மாணவி ஆசிட் வீசி தாக்கப்பட்ட சம்பவம், தேசிய தலைநகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



டெல்லி துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது, சிறுவன் ஆசிட் வீசிய சம்பவம் புதன்கிழமை (2022 டிசம்பர் 14) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மாணவி, சப்துர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


காலை 9 மணியளவில் பிசிஆர் அழைப்பு வந்தது. காலை வேளையில் பைக்கில் வந்த இருவர், 17 வயது சிறுமி மீது ஆசிட் போன்ற பொருளை வீசி தாக்கியதாக மோகன் கார்டன் காவல் நிலையப் பகுதியில் உள்ள பிசிஆர்க்கு தகவல் வந்தது. இந்தத் தாக்குதல்  சம்பவத்தின் போது சிறுமியின் தங்கையும் உடன் இருந்துள்ளார்.


மேலும் படிக்க | தனது முகத்தில் ஆசிட் வீசிய காதலனையே கரம் பிடித்த காதலி


அந்த சிறுமி, தங்களுக்கு தெரிந்த இருவர் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமிலத் தாக்குதல் (acid attack) என்பது வன்முறை தாக்குதல்களில் ஒன்று. அமிலங்களைக் கொண்டு முகம், மற்றும் உடல் உறுப்புகளை சிதைப்பதற்காக அண்மைக்காலங்களில் ஆசிட் தாக்குதல்கள் நடைபெற்று வருவது கவலைகளை அதிகரித்துள்ளது.  


மேலும் படிக்க | ஜூஸில் ஆசிட்... காதலனை கொன்ற காதலி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி


மேலும் படிக்க | தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக ஸ்டாலின் அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ