டெல்லியில் மோசமான அளவில் காற்று மாசு ஏற்பட்டிருந்தது. கடந்த மாதத்தில் ஏற்ப்பட்ட புழுதிப் புயல் காரணமாக படுமோசமான அளவில் காற்றில் மாசு காணப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு அறிவுறுத்த்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், டெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காற்றில் கலந்திருந்த மாசுகள் குறைந்துள்ளது. கனமழை காரணமாக தொடர்ந்து காற்றில் கலந்திருந்த மாசுகள் படிப்படியாக குறைந்து வருவதால், மக்கள் சுவாசிப்பதற்கு ஏற்றத் தரத்தை காற்று பெற்றுள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அதாவது காற்று தரக் குறியீடு அளவிடப்படுகிறது. 0-50 புள்ளிகள் இருந்தால் "நல்லது" என்றும், 51-100 புள்ளிகள் "திருப்திகரமான" என்றும், 101-200 புள்ளிகள் "மிதமான" என்றும், 201-300 புள்ளிகள் "மோசமானது" என்றும், 301-400 புள்ளிகள் "மிகவும் மோசமான" என்றும், 401-500 புள்ளிகள் "அபாயகரமானது" என்றும் அளவிடப்படுகிறது.


அந்த வகையில் டெல்லியில் காற்றின் அளவு இன்று 83 அளவுகளை கொண்டுள்ளதால், மனிதன் சுவாசிக்க ஏற்றத்தக்க "திருப்திகரமான" காற்று நிலவுகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்து வரும் நாட்களிலும் மாலையின் காரணமாக காற்றின் தரம் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் மிகவும் நல்லது என அளவிடப்படும் 0-50 புள்ளிகள் குறியீடு அளவில் இடம் பெரும்.


மேலும் தொடர் மழையால் டெல்லியில் வெப்ப நிலையும் குறைந்துள்ளது.