புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை டெல்லி காவல்துறை மேற்கொண்டு உள்ளனர். டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, மொத்தம் 2689 வாக்குச் சாவடிகளில், 545 வாக்குச் சாவடிகள் ஆபத்தானவையாக கருதப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் 21 மையங்களில் பல அடுக்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு பயங்கரவாத சம்பவமும் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக ஈ.வி.எம் இயந்திரம் ஏற்கனவே வாக்குச் சாவடிக்கு வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி எல்லையில் கடுமையான சோதனை:
காவல்துறையினரின் கூற்றுப்படி, தேர்தல் நேரத்தில் குற்றவியல் சம்பவங்கள் ஏற்படாத வகையில் எல்லையில் சோதனை கடுமையாக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்படும் சட்டவிரோத மதுபானங்களை தடுத்து நிறுத்தவும் பணிகள் மேற்கொண்டு உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், இதுவரை 96798 லிட்டர் சட்டவிரோத மதுபானங்களையும், 774 கிலோ போதைப்பொருளையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்த நேரத்தில், 494 சட்டவிரோத ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். தேர்தலைக் கருத்தில் கொண்டு, சுமார் 7397 உரிமம் பெற்ற ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


யமுனாவிலும் படகு மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும்:
ஷாஹீன் பாக் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க முழு வாக்குப்பதிவு முறையும் இங்கு செய்யப்பட்டுள்ளது. நடத்தை விதிகளை மீறி யாராவது ஆட்சேபிக்கத்தக்க செய்தியை அனுப்பினால் அல்லது சமூக ஊடகங்களில் செய்தி அனுப்பினால், அவர்கள் நோடல் அதிகாரியின் எண் 81300 99105 மற்றும் தொலைநகல் 011-28031130 க்கு புகார் செய்யலாம் என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர். டெல்லிவாசிகள் தங்கள் குறைகளை acp-cybercell-dl@nic.in என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.