Delhi Chalo Protest Bharat Bandh: பஞ்சாப், ஹரியானா மற்றும் அருகாமையில் உள்ள மாநில விவசாயிகள் 'டெல்லியை நோக்கி' என்ற போராட்டத்தை கடந்த பிப். 13ஆம் தேதி தொடங்கினர். வெவ்வேறு மாநில எல்லைகளின் ஊடாக டெல்லி நகருக்குள் விவசாயிகள் நுழைவதை காவல்துறை தரப்பில் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையே உள்ள ஷம்பு எல்லைக்கு அருகில் உள்ள அம்பாலா நகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலை (MSP), விவசாயிகளுக்கான ஓய்வூதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொழிலாளர் சட்டங்களின் திருத்தத்தை திரும்பப் பெறுவது, அரசு தனது பணியாளர்களை ஒப்பந்த ரீதியில் பணியமர்த்தக் கூடாது, வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கண்ணீர் புகை குண்டு வீச்சு


குறிப்பாக, டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறுவதை தடுக்கும் நோக்கில் ஹரியானா மாநில காவல்துறை அதன் மாநில எல்லையில் தடைகளை ஏற்படுத்தி உள்ளன. மேலும், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. குறிப்பாக, டிரோன்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | விவசாயிகள் போராட்டம்: அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் இன்று 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை


பெல்லட் துப்பாக்கி


மேலும், ஹரியானா போலீசார் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தடியடியில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பலத்த காயம் அடைந்து சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஹரியானா போலீசார் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாகவும், இதனால் விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இன்று பாரத் பந்த்


இது ஒருபுறம் இருக்க, போராட்டம் நடத்தும் விவசாய சங்கம் சம்யுக்தா கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த பாரத் பந்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடையடைப்பு போராட்டம் மட்டுமின்றி ஹரியானா பல முக்கிய மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற இருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
 
கூடுதல் கண்ணீர் புகை குண்டுகள்


குறிப்பாக, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை டெல்லி காவல்துறை ஆர்டர் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே கணிசமான கண்ணீர் புகை குண்டுகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 



எனினும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள தேகன்பூரில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படையினரின் கண்ணீர் புகைப்பிரிவிடம் டெல்லி காவல்துறை இன்னும் கூடுதலாக 30 ஆயிரம் கண்ணீர் புகை குண்டுகளை கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. 


டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிபூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளை நிறுத்துவதற்கு டெல்லி காவல்துறை தளவாட ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 144 தடை உத்தரவு ஒரு மாதத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம்,  ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவது, பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்-டிராலிகள் டெல்லிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவெட்டப்படாத நிலையில் வரும் பிப். 18ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்ததை நடத்திருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | மாநிலங்களவைத் தேர்தல்: 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்காத பாஜக


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ