புதுடெல்லி: டெல்லியின் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் இன்று அரசு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க சண்டிகரில் இன்று மாலை மத்திய அமைச்சர்களுடனான விவசாய பிரதிநிதிகளின் சந்திப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், பிப்ரவரி 8 மற்றும் 12 ஆகிய இரு தேதிகளிலும் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும், இவற்றால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விவசாய சங்க தலைவர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததுள்ளது.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சட்டம், கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக. அவற்றை ஏற்க மத்திய அரசை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஷம்பு மற்றும் கானௌரி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடங்கியுள்ளனர். எனினும், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ள நிலையில், அது முடியும் வரை, டெல்லிக்கு செல்ல முயற்சிக்க மாட்டோம் என்றும், மத்திய அரசு (Central Government) எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் விவசாயிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார்கள்
மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார். மத்திய அரசு பேச்சுவார்த்தைகளுக்கு முன்மொழிந்ததால், அனைத்து விவசாயிகள் சங்கங்களிடமிருந்தும் ஒப்புதலை பெற்று, இதற்கு சம்மதம் அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், மூன்று முக்கிய கோரிக்கைகளில் இன்னும் எந்த நிலைப்பாடும் எட்டப்படவில்லை.
- பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (Minimum Support Price - MSP) ஒரு சட்டம்
- விவசாயக் கடன் தள்ளுபடி (Farmers Loan Waiver)
- சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல்
மேலும் படிக்க | 'அரசியலமைப்புக்கு எதிரானது...' தேர்தல் பத்திரங்கள் ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போதும்: விவசாயிகள்
இன்று விவசாயிகள் (Farmers) மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், தற்போது ஷம்பு எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இரு தரப்பிலும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. “எல்லையில் இருப்பதோ டெல்லிக்குள் செல்வதோ எங்களுக்கு பெரிய விஷயம் அல்ல. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். அவை நிறைவேறி விட்டால், வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம்.” என்று ஷம்பு எல்லையில் இருந்த விவசாயி ஒருவர் கூறினார்.
பஞ்சாபில் ரயில் மறியல்
இதற்கிடையில், எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக ஹரியானா காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் இன்று பஞ்சாபில் ஏழு இடங்களில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்று பாரதி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) தெரிவித்துள்ளது.
இன்று மாலை நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளுக்காக அரசாங்கமும் விவசாயிகளும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சுமுகமான நிலை எட்டப்பட்டு போராட்டங்கள் முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் என்பதே இரு தரப்பினரின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | அர்விந்த் கேஜரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்... அடுத்தது என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ