உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால், மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு செல்கின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜிரிவால், தான் செயல்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு முடக்கி வருவதாகவும், மூன்று மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி MLA-க்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் IAS அதிகாரிகள் எவ்வித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை எனவும், IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரம், கடந்த 9 நாட்களாக துணை நிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார். அவருடன், சில அமைச்சர்களும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.


இவரது போராட்டத்திற்கு மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜி, கர்நாட்டக முதல்வர் HD குமாரசாமி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு, நடிகர் கமல் ஹாசன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் ஆதரவு குரல் எழுப்பினர்.



இதற்கிடையே, கேஜிரிவால் போராட்டத்திற்கு எதிராகவும், IAS அதிகாரிகள், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். 


இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கவர்னர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு கேஜிரிவாலுக்கு யார் அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. அதேவேலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேஜிரிவாலின் போராட்டம் ஓர் நாடகம் எனவும், இந்த நாடகத்திற்கு பலியாவது டெல்லி மக்கள் தான் எனவும் தெரிவித்தார்.


இதனையடுத்து நேற்று மாலை அரவிந்த் கேஜிரிவால் தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தார். எனினும் இந்த போராட்டத்தின் காரணமாக கேஜிரிவால் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.


இந்நிலையில் இன்று தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் கெஜ்ரிவால் ரத்து செய்துள்ளார். ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வரும் அரவிந்த் கேஜிரிவால் அவர்கள் ஆளுநர் இல்லத்தில் நடத்திய தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு லேசாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நாளை அவர் சிகிச்சைக்காக பெங்களூரு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.