ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!

ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் வெறும் 1559 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

1 /8

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்: நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதிலிருந்து விடுபடலாம். இந்த பிளான் 336 நாட்கள் வரை செல்லுபடியாகும். நீங்கள் நீண்ட செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தையும் தேடுகிறீர்களானால், இந்த ஜியோ திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதில், உங்களுக்கு வேலிடிட்டி மட்டுமின்றி, அன்லிமிடேட் அழைப்பு வசதியும் இருக்கிறது.

2 /8

ஜியோ ரூ 1559 திட்டம் - இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,559க்கு 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது, செல்லுபடியாகும் காலம் கிட்டத்தட்ட 1 வருடம். 

3 /8

டேட்டாவைப் பற்றி பேசுகையில், பயனர்கள் மொத்தம் 24 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். முழு தரவுகளும் தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக இருக்கும். இந்த திட்டம் குறிப்பாக குறைந்த விலையில் சிம்மை ஒரு வருடத்திற்கு செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு உகந்தது.

4 /8

இந்த திட்டத்தில், ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அழைக்க வரம்பற்ற அழைப்பு வசதி வழங்கப்படும். மேலும், 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படும். இது தவிர, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அணுகல் வழங்கப்படும்.

5 /8

அதேநேரத்தில் நீங்கள் ஜியோவில் நீண்ட கால வேலிடிட்டி இருக்கும் பிளானை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், ஒரு வருட பிளான்களும் இருக்கின்றன. ரூ.3,227 ரீசார்ஜ் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேடாவுடன் ஒரு வருடம் 730ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 

6 /8

இதுதவிர அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்சனும் உண்டு. ஜியோ செயலிகளுக்கான அணுகலும் கிடைக்கும். இன்னும் கூடுதல் டேட்டா வேண்டும் என எதிர்பார்த்தால், ரூ.3,333 ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. 

7 /8

வருடத்திற்கு 912.5ஜிபி கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். இதில் ஜியோ டிவியின் மூலம் Fancode ஓடிடியை நீங்கள் ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சப்ஸ்கிரிப்சனும் கிடைக்கும்

8 /8

ஏர்டெல்லின் ரூ.1799 திட்டம் - ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.1799. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் முழு 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், மொத்தம் 3600 எஸ்எம்எஸ் மற்றும் 24 ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும்.