டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதியுதவி
டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடெல்லி கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹோட்டலின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைப்பெற்று வருகிறது. மீட்பு பணியில் 30 வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தை நேரில் பார்த்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தீ விபத்தில் இறந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் கூறினார்.