நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் டெல்லி அரசு! கேஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை!
Delhi motion of confidence: டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார்
புதுடெல்லி: டெல்லி சட்டசபையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து பாஜகவுக்கு ‘செக்’வைத்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாரதிய ஜனதா கட்சி குதிரை பேரம் நடத்தியதாகவும், தனது அரசாங்கத்தை கவிழ்க்கவும் பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் டெல்லி முதலமைச்சர்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்ததை அடுத்து, சட்டசபை நடவடிக்கைகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நம்பிக்கை தீர்மானம் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இன்று முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான பிரேரணை தாக்கல் செய்த பிறகு, சட்டசபை நடவடிக்கைகள் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவேன்" என்று கெஜ்ரிவால் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கு தொடர்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்க இயக்குனரகம் (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே ஐந்து முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ஆறாவது முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ED சம்மனை ஏற்காததற்காக ED தாக்கல் செய்த புகாரின் பேரில் பிப்ரவரி 17 ஆம் தேதி கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே நாளை, சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு இருக்கும் நிலையில் கேஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் என்ன என்றும் கேள்விகள் எழுகின்றன.
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வரும் கேஜ்ரிவால், டெல்லி அரசை எப்படியாவது கவிழ்க்க பாஜக முயன்று வருவதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தப் பிண்ணனியில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் உள்ள அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்வது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் , “பொய் வழக்குகள் பதிவு செய்து வரும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைப்பதையும், அரசுகளை கவிழ்ப்பதையும் பார்க்கிறோம். அதுபோன்று, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்ய நினைக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | NDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ