Bharat Nyay Yatra Vs Lok Sabha election 2024: ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் (Bharat Jodo Yatra) இரண்டாம் கட்ட பயணமான "இந்திய நீதி பயணம்" (Bharat Nyay Yatra) வரும் ஜனவரி 14 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் முடிக்கவடைய உள்ளது. 2024 லோக்சபா தேர்தலைக் குறி வைத்து இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை 'கை' கொடுத்ததா?
ஏற்கனவே கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 30 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாரத் ஜோடோ யாத்திரை பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடந்தது. சுமார் 3570 கிலோமீட்டர் என 145 நாள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தில் எதிர்க்கட்சி கட்சி தலைவர்கள், பிரபலங்கள், எழுத்தாளர்கள், ராணுவ வீரர்கள், முன்னாள் நீதிபதி, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பேசிப் பொருளாக மாறியது. பயணம் மேற்கொண்ட இடமெல்லாம் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஆதரவு பெருகியது. ராகுல் காந்திக்காக கூட்டம் கூடியது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த ஆதரவை வைத்து பார்க்கும் போது, தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது.
அதனை மெய்பிக்கும் வகையில், பாரத் ஜோடோ யாத்திரைக்கு பிறகு, நடைபெற்ற கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. அது காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒரு உற்சாகத்தை கொடுத்தது.
அதேநேரத்தில் 2024 லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதி என அழைக்கப்பட்ட, சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே ஆட்சி அமைக்க முடிந்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தோல்வியை கண்டது காங்கிரஸ். இந்த தோல்வியின் காரணமாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பயணத்திற்கு கிடைத்த ஆதரவு கேள்விக்குறியானது. அதாவது ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாரத் ஜோடோ யாத்திரை மேஜிக் செய்யவில்லை என பலரால் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் "இந்திய நீதி பயணம்" மக்களவைத் தேர்தலில் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
"நியாய்" பெயர் வைக்க காரணம் என்ன?
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பே, ராகுல் காந்தி "நியாய்" வேண்டும் (நீதி வேண்டும்) என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டார். அதேபோல அப்போது காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை (NYAY) அறிவித்தது, அதன் கீழ் ஏழை குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 72 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடிக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தனர். 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல், 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியுற்றார். ஆனால் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட "குறைந்தபட்ச வருமானத் திட்டத்தைப் (NYAY)" பற்றிய நன்மைகள் மக்களிடம் சென்று சேரவில்லை என்பதை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கண்டறிந்தது.
தற்போது மீண்டும் நியாய் (NYAY) முழக்கத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், ராகுல் காந்தியின் பயணத்திற்கு 'நியாய் யாத்திரை' என்று பெயரிடப்பட்டு உள்ளதை பார்த்தால், காங்கிரஸ் மீண்டும் தனது பழைய வாக்குறுதியான குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரப்போகிறது.
மணிப்பூரிலிருந்து பயணம் தொடங்குவதற்கும் காரணம் என்ன?
ஏறக்குறைய ஒரு வருடமாக வன்முறை வெறியாட்டத்தில் சிக்கியுள்ள உள்ள மணிப்பூரில் இருந்து 'பாரத் நியாய் யாத்திரை' தொடங்கும் நிலையில், மணிப்பூர் மாநில வன்முறை பிரச்சனை முன்வைத்து பாஜக அரசை கடுமையாக சாடுவார் ராகுல் காந்தி.
மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக
மோடி அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டை போட ராகுல் திட்டம்
பாரத் நியாய் யாத்தியை பயணத்தின் போது, குறைந்தபட்ச வருமான உத்தரவாதம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வளர்ந்து வரும் முதலாளிகளின் சாம்ராஜ்யம் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளை எழுப்பி மோடி அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டை போட ராகுல் காந்தி முயற்சி செய்வார்.
பாரத் நியாய் யாத்ரா ஹிட் அடிக்குமா?
செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதன் பிறகு கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் தோல்வி கிடைத்தது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் இரண்டாவது பயணம் எந்தளவுக்கு ஹிட் அடிக்கும், காங்கிரஸ் கட்சிக்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க - “பிரதமர் மோடி என்றால் "பனோத்தி" -ராகுல் காந்தி கடும் தாக்கு.. பாஜகவினர் பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ