தில்லியின் மூத்த குடிமக்களுக்கு ‘அயோத்யா தரிசனம்’ நிச்சயம்: Arvind Kejriwal
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியின் மூத்த குடிமக்களுக்கு `அயோத்தி தரிசனம்` கிடைக்க அயோத்தி அழைத்து செல்லப்படுவார்கள் என உறுதியளித்தார்
ராமர் கோயிலின் தரிசனத்திற்காக ஆம் ஆத்மி அரசு முதியவர்களை தேசிய தலைநகரிலிருந்து அயோத்திக்கு அழைத்துச் செல்லும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். டெல்லி சட்டமன்றத்தில் பேசிய கேஜ்ரிவால், "அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்ட பிறகு, வயதானவர்களை தில்லியில் இருந்து அயோத்திக்கு தரிசனம் செய்ய அழைத்து செய்வோம்" என்றார்.
"நான் ராமனின் பக்தனான அனுமனின் பக்தன். ஆகவே நான் இருவரின் பக்தன். பகவான் ராமர் அயோத்தியின் ராஜா. அவருடைய ஆட்சியில் எல்லாம் நன்றாக இருந்தது என்று கூறப்படுகிறது. துக்கம் இல்லை. எல்லா வசதியும் இருந்தது இது 'ராம் ராஜ்ஜியம்' என்று அழைக்கப்பட்டது, " என டெல்லி முதல்வர் மேலும் கூறினார்.
ராமர் கோயில் (Ram Temple) கட்டுமானம் தற்போது அயோத்தியில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுமானம் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என விஸ்வ இந்து பரிஷத் (VHP) கூறியுள்ளது.
ALSO READ | ராமருக்கு உதவிய அணிலை போல் ராமர் கோவில் கட்ட அனைவரும் பங்களிக்கவும்: அக்ஷய் குமார்
அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் 'பூமி பூஜை' நிகழ்ச்சியின் போது கேஜரிவால் நாட்டிற்கு வாழ்த்து கூறியிருந்தார். பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
"பூமி பூஜை நடைபெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். பாகவான் ராமரின் ஆசீர்வாதம் நமக்கு தொடர்ந்து கிடைக்கும்" என்று அரவிந்த் கேஜரிவால் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, நவம்பர் 8, 2019 அன்று, உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பிரிவு, ராம ஜென்ம பூமி-பாப மசூதி நில தகராறு வழக்கில் வழக்குத் தொடுப்பவர்களில் ஒருவரான ராம் லல்லாவுக்கு, அதாவது குழந்தை ராமருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது, ராமர் கோவில் நிர்மாணிக்க வழி வகுத்தது. அயோத்தியில் ஒரு மசூதி கட்ட முஸ்லிம் தரப்பிற்கு மாற்று நிலத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ALSO READ | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR