புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவரின் வீட்டை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர். 


முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிய மர்ம நபர்கள், பின்னர் தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டார். இந்த தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதுதை அறிந்துக்கொள்ள காவல்துறை முயற்சிக்கையில், வடக்கு டெல்லியை சேர்ந்த அந்த தொலைபேசி எண் கடந்த ஓர் ஆண்டாக, செயல்பாடு அற்று இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மூலம் அறிந்துள்ளனர்.



இதன் காரணமாக கெஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்த முறையான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, டெல்லியில் உள்ள முதல்வரில் வீட்டை சுற்றி, வழக்கத்தை விட அதிகமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக, டெல்லி முதல்வரின் மகளை கடத்த இருப்பதாகவும், அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் குண்டு வைத்துள்ளதாகவும், பல முறை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.