டெல்லி சட்டசபைத் தேர்தலின்போது திருமண உடையில் வந்து புதுமண தம்பதி வாக்களித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 


வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சாந்தினி சவுக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர். புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.


காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி வரை மொத்தம் 54.78 சதவீதம் பேர் வாக்களித்தனர். அதிகப்படியாக, வடகிழக்கு டெல்லியில் 62.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 


இந்நிலையில் டெல்லி சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அப்போது கிழக்கு டெல்லியின் ஷகர்பூரிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் திருமண உடையில் மணமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.