புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) டெல்லியில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களில் கட்சி முன்னிலை வகிக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக 7 இடங்களில் முன்னிலை வகித்தது, தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்களின்படி. நகரம் முழுவதும் 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றால் *உறுதி செய்யப்பட்டால்), 2015 தேர்தலில் 67 இடங்களை வெல்ல முடிந்த அவரது கட்சிக்கு இது ஹாட்ரிக் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "தேர்தல் பற்றி வெளியான அனைத்து கருத்து கணிப்பு பிப்ரவரி 11 அன்று தவறாக நிரூபிக்கப்படும் என்று கூறினார். ஆனால் ஏறக்குறைய கருத்து கணிப்பை முடிவுகளை தான் டெல்லி தேர்தல் முடிவும் காட்டுகிறது.


பிப்ரவரி 8 ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானின் போட்டியாக இருக்கும் என்று பாஜக கூறியிருந்தது. இன்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.


டெல்லியின் மகன் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர் என்பதை டெல்லி மக்கள் நிரூபித்துள்ளனர் என்று ராஜீந்தர் நகரில் இருந்து வென்ற பிறகு ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சாதா கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கெஜ்ரிவால் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக பணியாற்றுகிறார். அவர் செய்யும் வேலையே தேசபக்தியைக் குறிக்கிறது. பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் செய்வது தேசபக்தி அல்ல" என்றும் கூறினார்.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை "பயங்கரவாதி" என்று அழைத்த பாஜகவுக்கு தில்லி மக்கள் ஒரு பொருத்தமான பதிலை அளித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் தெரிவித்தார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.