டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட  பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் இன்று 52 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 12 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.


டெல்லியில் காலை வேளையில் குறைந்த பட்ச வெப்ப நிலை 8.2 டிகிரி செல்சியஸாக உள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.