டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்!!
வட மாநிலங்களில் பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது.
புதுடெல்லி: வட மாநிலங்களில் பனிமூட்டம் அளவுக்கதிகமாக இருப்பதால் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது.
பனிமூட்ட காரணத்தினால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பல்வேறு சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
ரெயில்கள் சேவையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 81 ரெயில்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டது. இதில் 21 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ரெயில்கள் ரத்து செய்ய்பபட்டு உள்ளது.