தில்லி தன்னுடைய தேவைக்கு அதிகமாக நான்கு மடங்கு ஆக்ஸிஜன் கோரியது: SC குழு
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசு எடுத்து துரித நடவடிக்கையினால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீர்ந்தது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு குறைந்து வருவதை அடுத்து நிலைமை கட்டுக்குள் உள்ளது.
முன்னதாக, மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவை குறித்து தணிக்கை செய்ய குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் அமைத்த ஆக்ஸிஜன் கமிட்டி உச்சநீதிமன்றத்துக்கு தன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற குழு அமைத்த தணிக்கை குழு தனது அறிக்கையில், தில்லி (Delhi) தன்னுடைய தேவைக்கு அதிகமாக நான்கு மடங்கு ஆக்ஸிஜன் கோரியதாக கூறியுள்ளது. தில்லி அரசு கூறி அளவிற்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், உண்மையிலேயே ஆக்ஸிஜன் தேவைப்பட்ட 12 மாநிலங்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் அனுப்ப முடியாமல் போனது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | COVID-19: ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
தில்லி அரசு 1,140 MT ஆக்ஸிஜன் தேவை என கோரிய நிலையில், உண்மையான ஆக்ஸிஜன் தேவை வெறும் 289 MT தான் என உச்சநீதிமன்றம் அமைத்த ஆக்ஸிஜன் கமிட்டி உச்சநீதிமன்றத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது!
மத்திய அரசு பரிந்துரையை ஏற்று உச்சநீதிமன்றம் ஆக்ஸிஜன் ஆடிட் குழுவை அமைத்ததும், அரவிந்த் கேஜ்ரிவால் அரசு, தங்களுக்கு 700 டன் ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்ட நிலையில் 582 டன் போதுமானது. மிச்சத்தை மத்திய அரசு (Central government) தேவையான மாநிலங்களுக்கு கொடுக்கலாம் என கூறியது குறிப்பிடத்தகது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Crisis) சமயத்தில், காங்கிரஸ் டூல்கிட் அம்பலமாகி, அதில் இரண்டாவது அலையில் மத்திய அரசுக்கு எந்த வகையில் அவப்பெயர் ஏற்படுத்த போட்ட திட்டம் அமலமாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR