தம்பதிகளிடையே சண்டை வரும் நேரத்தில் சொல்லக்கூடாத 7 விஷயங்கள்!

உறவுகளிடையே அடிக்கடி சண்டை வரும் அதிக காரணம் என்னவென்று அவர்களுக்கே தெரியாது ஆனால் அடிக்கடி சண்டையிடும் பழக்கம் அவர்களுக்குள் நிறைந்திருக்கும் அந்த வகையில் உறவுகள் இடையே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் அதிகம் அதிகம் உள்ளன அவற்றுள் நீங்கள் சொல்லக்கூடாத ஏழு விஷயங்கள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கணவன் மனைவி இருவரும் அன்பு பாசம் ஒற்றுமை இவை அனைத்தும் நிறைந்திருந்தாள் எந்த ஒரு பிரச்சனையும் உறவுகளிடையே ஏற்படாது ஆனால் அதிகமானோர் காரணமில்லாமல் சண்டை போடுகின்றனர் அந்த சண்டை மிகப்பெரிய சூழ்ச்சியாக மாறலாம் அல்லது வாழ்க்கை வினையாக மாறலாம் எனவே உங்கள் உறவுகளில் நீங்கள் சண்டை போடும்போது பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் என்னவென்று முழுமையாகப் பார்க்கலாம்.

1 /8

கணவன் மனைவி இடையே பல பிரச்சினைகள் ஏற்பட முக்கிய காரணம் அவர்கள் ஒருவருக்கொருவர் தேவையற்ற குறைகளைக் கூறி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவது. இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.

2 /8

கணவன் மனைவி இடையே எப்பொழுதும் ஒருவருக்கொருவர் மற்றவரைக் காட்டி குறை சொல்லிப் பேசக் கூடாது.

3 /8

தம்பதியர் இடையே அழகு வைத்துக் குறை சொல்லிப் பேசக்கூடாது முக அழகை வைத்துத் தாழ்த்தியும் அல்லது ஒப்பிட்டோ ஒருபோதும் பேசவே கூடாது.

4 /8

தம்பதியர் வெளியில் செல்லும் இடத்திலோ அல்லது வீட்டில் உறவுகள் முன் சண்டையிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

5 /8

நீ என் வாழ்க்கையில் வராமல் இருந்தால் நான் சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று இது போன்ற வார்த்தையை ஒரு போதும் சண்டையிடும் நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.

6 /8

ஒருபோதும் கணவனோ அல்லது மனைவியோ தன்னுடைய உறவுகள் இடையே அவமதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

7 /8

கணவன் மனைவி ஏதாவது தவறு செய்தால் மனைவி வீட்டில் அவர்களைப் பற்றிக் குறை கூறக்கூடாது மற்றும் மனைவி தன் கணவனைப் பற்றி அவர்கள் குடும்பத்தாரிடம் தவறான முறையில் குறை கூறக்கூடாது.

8 /8

தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மனம் விட்டுப் பேசினால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை தேட முடியும். ஒரு போதும் அவர்கள் செய்யும் வேலையைப் பற்றிக் குறை சொல்லவே கூடாது. உதாரணத்திற்கு மனைவி செய்யும் சமையலில் குறை சொல்லுதல் அல்லது கணவன் ஏதாவது பொருள் வாங்கிட்டு வந்தால் குறை சொல்லுதல் இதுபோன்று செய்யக்கூடாது.