புது தில்லி: தில்லி அரசு திங்கள்கிழமை இரவு ஒரு பெரிய முடிவை எடுத்தது. மதுபான விலையை 70 சதவீதம் அதிகரித்தது. டெல்லி அரசு இந்த வரியை "சிறப்பு கொரோனா கட்டணம்" கீழ் அதிகரித்துள்ளது. அதிகரித்த விலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பொருந்தும். டெல்லி அரசு எம்ஆர்பிக்கு (MRP) 70 சதவீத வரி அறிவித்துள்ளது. அதாவது டெல்லியில் ஒரு பாட்டில் மதுபானம் ரூ .1000 என்றால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அது ரூ .1700 கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் மதுபானக் கடைகளில் மக்கள் நிறைந்து வழிந்தது. கொரோனா பரவாமல் தடுக்க சமூக தூரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் மது ஆர்வலர்கள் மதுபாட்டலை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டும் தான் இருந்தார்கள் தவிர, அவர்கள் விதியை கடைபிடிக்க வில்லை. 


லாக் டவுன் 3.0 இன் முதல் நாளில் தளர்வு ஏற்பட்டதால், டெல்லியில் சமூக தொலைவு அகற்றப்பட்டது. ஏராளமான மக்கள் மதுபானக் கடைகளுக்கு முன்பு திரண்டனர். இதன் காரணமாக பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் இதுபோன்ற நிலைமை குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


 



நேற்று மாலை பேசிய டெல்லி முதல்வர், மக்கள் மீண்டும் சமூக தூரத்தை பின்பற்றாவிட்டால், நாங்கள் முழு பகுதியையும் சீல் வைப்போம் என்று தெளிவாக கூறினார். இது மட்டுமல்லாமல், கடைகளுக்கு முன்னால் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 


இருப்பினும், நேற்று இரவு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, டெல்லி அரசாங்கம் கூட்ட நெரிசலைக் குறைக்க மது விலையை அதிகரித்தது. அதாவது விலையை அதிகரிப்பது மூலம் கடைகளில் நெரிசலைக் குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.


திங்கள்கிழமை மாலை, முதல்வர் கெஜ்ரிவால், சமூக தூரத்தை பராமரிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி நாங்கள் விலக்கு அளித்துள்ளோம் என்று அவர் கூறினார். திங்கட்கிழமை சில கடைகளுக்கு முன்னால் மக்கள் சமூக தூரத்தை பின்பற்றவில்லை என்பதைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இதன் காரணமாக நெரிசல் ஏற்பட்டது. இது உங்கள் இழப்பு மட்டுமே. 


நாட்டின் சில இடங்களில், மதுபானக் கடைகளில் சமூக தூரத்தை பராமரிக்கும் விதி மீறப்பட்டது. உள்துறை அமைச்சகம் ஊரடங்கு காலத்தை திங்கள்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து. பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மதுபானம் மற்றும் புகையிலை கடைகளை திறக்க அனுமதித்தது. திங்களன்று, கட்டுப்பாடற்ற கூட்டம் மற்றும் சமூக தூர ஒழுங்குமுறையை பின்பற்றாததால் தேசிய தலைநகரில் திறந்த மதுபான கடைகள் பல மூடப்பட வேண்டியிருந்தது. பல இடங்களில் கூட்டத்தை கலைக்க காவல்துறையும் தடியடி நடத்த வேண்டியிருந்தது.