விவசாயிகளின் நலனைக் காக்க வேண்டி எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த டெல்லி மாநில நிதிநிலை அறிக்கையில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி மாநில நிதியமைச்சர் சிசோடியா வரும் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து பேசினார். அப்போது விவசாயிகளின் அவலநிலையை கருத்தில் கொண்டு அவர்களது மேம்பாட்டுக்காக நூறு கோடி ஒதுக்கப்படுவதாகவும் இந்த நிதியைக் கொண்டு எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.


இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற உள்ள முதல் மாநிலம் டெல்லி என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட விவசாயிகள் தற்கொலையில் ஈடுபடவில்லை என்றும் 21 -ம் நூற்றாண்டில் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் வேளையில் அவர்கள் தற்கொலை செய்யும் அவல நிலையில் இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.


2006 ஆம் ஆண்டில் தாக்கலான எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நிலையில் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 616 ரூபாயும் நெல்-க்கு குவிண்டாலுக்கு 2,667 ரூபாயும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


இது மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விடவும் 3 மடங்கு அதிகம் என்று டெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.