புதுடெல்லியில் மரங்களை வெட்ட டெல்லி உயர்நீதிமன்றம் தடை!
புதுடெல்லியில் மறுவளர்ச்சி என்னும் பெயரில் மரங்களை வெட்டிவருவதை வரும் ஜூலை 2-ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
புதுடெல்லியில் மறுவளர்ச்சி என்னும் பெயரில் மரங்களை வெட்டிவருவதை வரும் ஜூலை 2-ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
மறுவளர்ச்சி என்னும் பெயரில் புதுடெல்லியில் உள்ள 7 காலனிகளில் 14000 மரங்களை வெட்டி புதிய மரங்களை வெட்ட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி குடியிறுப்பு வாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
தெற்கு டெல்லியின் நேதாஜி நகர், நூரஜ் நகர், சரோஜினி நகர் ஆகிய பகுதிகளில் இருக்கும் மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது மத்திய அமைச்சர் ஹர்ச வர்தான் அவர்கள் தான் எனவும், டெல்லி அரசு தான் எனவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னதாக இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன் தெரிவிக்கையில், டெல்லி அரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் அதிகாரம் செயல்படாது, அந்த வகையில் மரங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இத்திட்டத்திற்கான பணிகளை தொடங்கும் விதமாக தெற்கு டெல்லி பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டி வருகின்றனர். இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிறுப்பு வாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி இதுகுறித்து கூறுகையில், தற்போதுள்ள 21,040 மரங்களில் 14,031 மரங்கள் மறுவளர்ச்சி என்னும் திட்டத்தின் கீழ் வெட்டப்பட்டு விட்டது. அதே பகுதியில் வெட்டப்பட்டதை விட அதிக மரங்கள் நடுவதற்கான பணிகளையும் அரசு செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த 7 காலனிகளிலும் மரங்களை வெட்டிவருவதை வரும் ஜூலை 2-ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.