நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை சோனியா மற்றும் ராகுல் காந்தி இயக்குனர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது. இவற்றில் முறைகேடு நடந்துள்ளது என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்ததை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடித்துக்கொண்டது. மேலும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு நிர்வாகத்தின் உத்தரவு எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அசோசியேட் ஜர்னல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு நிர்வாகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. இன்னும் இரண்டு வாரத்தில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனக் கூறி அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.