டெல்லி பெண் சப்-இன்ஸ்பெக்டர் மெட்ரோ நிலையம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்
டெல்லி ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
புது தில்லி: டெல்லி காவல்துறையின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் அதிகாரியாக இருந்த பெண் எஸ்.ஐ. டெல்லி ரோஹினி பகுதியில் இறந்து கிடந்தார். ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையம் அருகே அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டன. இறந்த எஸ்.ஐ.யின் பெயர் ப்ரீத்தி அஹ்லவத். அவர் 2018 ஆம் ஆண்டில் டெல்லி போலீஸில் பணிக்கு சேர்ந்தார்.
கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கற்பழிப்பு வழக்கு தொடர்பான சில விசாரணைகளை அவர் செய்து வருவதாகவும், அதில் அவர் பலமுறை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு கோணத்தையும் மனதில் வைத்து காவல்துறை விசாரித்து வருகிறது. சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் கைது செய்யப்படலாம்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் ப்ரீத்தி ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து, துப்பாக்கியை எடுத்து, அவரது தலையில் சுட்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை போலீசார் மீட்டுள்ளனர். கூடுதல் கமிஷனர் எஸ்.டி. மிஸ்ரா பேசுகையில், "சி.சி.டி.வி அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்" என்றார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் தனிப்பட்ட பகை இருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஆதாரங்களின்படி, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் வடகிழக்கு டெல்லியின் பஜான்புராவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலையில் அரசாங்க துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.