சிம்லாவை விட கடும் குளிர் பிரதேசமாக டெல்லி காணப்பட்டது!
கடந்த 119 ஆண்டுகளில் டிசம்பர் மாதத்திற்கான இன்றைய (திங்கட்கிழமை) தேசிய தலைநகரம் டெல்லியில் அதிகளவு குளிரான நாளாக பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
கடந்த 119 ஆண்டுகளில் டிசம்பர் மாதத்திற்கான இன்றைய (திங்கட்கிழமை) தேசிய தலைநகரம் டெல்லியில் அதிகளவு குளிரான நாளாக பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
டெல்லி (Delhi) உட்பட வட இந்தியா (North India) முழுவதும் குளிர் (Cold) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியின் சப்தர்ஜங் பகுதில் காலை 2.5 டிகிரி வெப்பநிலையை (Temperature) பதிவாகி உள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது.
நாட்டின் தலைநகரம் நடுங்கி கொண்டிருக்கிறது. டெல்லியில் பொதுவாக அக்டோபர் மாதம் முதல் பனிகாலம் தொடங்கும். அடுத்தடுத்து மாதங்கள் தொடர்ந்து அதிகமாகி டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் பனிபொழிவு ஏற்படும். தற்போது டெல்லியில் பயங்கர குளிர் காலம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ரத்தத்தை உறைய வைப்பது போல உள்ளது. டெல்லியில் தினமும் குளிர் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
தேசிய தலைநகரில் 1997 முன்பு இருந்த சாதனையை 22 ஆண்டுகளுக்கு பிறகு குளிர் முறியடித்திருந்தாலும், இதுபோன்ற குறைவான வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில் நான்காவது முறையாக மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த மாதத்தில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழே சென்றுவிட்டது.
டிசம்பரில் டெல்லியில் மிகக் குறைந்த வெப்பநிலை டிசம்பர் 18 அன்று 12.2 டிகிரி பதிவானது. டிசம்பர் 17 முதல் நாளின் அதிகபட்ச வெப்பநிலை 16° C -க்கு மேல் அதிகரிக்கவில்லை. பனி மூடிய இமயமலை மலைகளில் இருந்து வீசும் குளிர் காற்று காரணமாக, தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் நிலவுகிறது.
வானிலை ஆய்வுத் துறையிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை வீழ்ச்சியால் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது. வெப்பநிலை குறைந்து வருவதால், தலைநகர் டெல்லி உட்பட என்.சி.ஆரிலும் காலையிலும் மாலையிலும் அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, ரயில் மற்றும் விமானப் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
கடுமையான பனிமூட்டமும் காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மீட்டர் தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர். பனிமூட்டம் காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.
சிம்லாவில் இன்று காலை 3 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்த நிலையில், சிம்லாவை விட கடும் குளிர் பிரதேசமாக டெல்லி காணப்பட்டது.
மேலும் அன்மை செய்தி, சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN தொலைக்காட்சியை பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.