புதுடெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியை தூங்கா நகரமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன டெல்லி உலகின் பெரிய நகரங்களான நியூயார்க், ஷாங்காய் போன்றே, இனி 24 மணிநேரமும் இயங்கும். இங்கேயும் மக்கள் இப்போது இரவில் தாமதமாக விருந்திற்கு செல்லலாம், குடும்பத்துடன் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம், அலுவலகங்கள் மற்றும் கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

24 மணி நேரமும் தூங்கா நகரமாக மாற்றும் திட்டம் 


தற்போது 1.67 கோடியாக இருக்கும் டெல்லியின் மக்கள் தொகை 3.9 கோடியாக அதிகரிக்கும் என்று வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது, ​​டெல்லியின் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் 30 வயது இளைஞர்கள். இத்தகைய சூழ்நிலையில், மாஸ்டர் திட்டம் இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். டெல்லி 24 மணி நேரம் செயல்படும் வகையில், பல கொள்கை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். 


கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிலைமைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2015 (Model Shops and Establishments (Regulation of Employment and Conditions of Service) Act, 2015  மற்றும் இரவு நேர பொருளாதாரம் (night-time economy - NTE) கொள்கை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படுவதன் மூலம் '24-மணிநேர நகரம் ' என்ற முன்வரைவு திட்டம்  உருவாக்கப்படும் கூறுகிறது. மேலும், டெல்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு இனி அனுமதி வழங்கப்படாது என்று மாஸ்டர் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. MPD 2041அறிவிப்புக்குப் பிறகு, நகர்ப்புற கிராமப்புறங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


'டெல்லி மாஸ்டர் பிளான் 2041' (Delhi Master Plan 2041)


'டெல்லி மாஸ்டர் பிளான் 2041'  என்னும் திட்டத்தில், டெல்லியை '24-மணிநேர நகரமாக 'மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியின் பொருளாதார நடவடிக்கைகள் இரவும் பகலும் தொடரும். இந்த தில்லிக்கான இந்த மாஸ்டர் திட்டத்தில், பெரிய அளவில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மலிவு விலை வீடுகள் மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பான திட்டங்களும். இந்த 'டெல்லி மாஸ்டர் பிளான் 2041' டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (DDA) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், அடுத்த 20 ஆண்டுகளில் தில்லியின் 


ALSO READ | வருமான வரியை தாக்கலுக்கு புதிய இணையதளம்; முக்கிய அம்சங்கள் பிற விபரம்


 


இரவு வாழ்க்கை 


இரவு நேர பொருளாதாரம் பல நாடுகளில் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் உதவியுள்ளது. இருப்பினும், இதற்கு நிர்வாகக் கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை. சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் ஈர்ப்பதற்காக இரவில் பொருளாதார நடவடிக்கைகள், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகளுக்காக நகரத்தில் , அதற்கான இடங்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதை Delhi Master Plan 2041வலியுறுத்துகிறது. 


டெல்லியின் வணிகப் பகுதிகளான கனாட் பிளேஸ், வால்ட் சிட்டி மற்றும் கரோல் பாக் ஆகியவை வரலாற்று ரீதியாக வர்த்தகத்தின் முக்கிய மையங்களாக விளங்குகின்றன. டெல்லியின் வணிகப் பகுதிகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வரைவில் கூறப்பட்டுள்ளது.


யமுனா புத்துயிர் பெறும்


பசுமை வழித்தடத்தை உருவாக்குவது உட்பட யமுனாவை புத்துயிர் பெறவும் வரைவு முன்மொழிகிறது. யமுனாவின் கரையில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி செய்வதற்கான வசதிகள் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்படும். இது தவிர, புலம்பெயர்ந்த மாணவர்களின் வாழ்க்கை மற்றும் கல்விக்கான சிறந்த இடம் டெல்லியில் உருவாக்கப்படும், வரவிருக்கும் காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு, பார்க்கிங் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.


ALSO READ | கண்ணாமூச்சி காட்டும் காட்டும் கொரோனா; குறையும் தொற்று; எகிறும் இறப்பு எண்ணிக்கை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR