புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் சனிக்கிழமை (ஜூன் 5, 2021) அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிவித்து, தேசிய தலைநகரில் உள்ள சந்தைகள் ஒற்றைப்படை - இரட்டை படை பார்முலாவின் (odd-even formula) படி செயல்பட அனுமதிக்கப்படும் என்பதை அறிவித்த பின்னர், உள்நாட்டு வர்த்தகர்கள் அமைப்பு, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) இந்த பார்முலா அமல்படுத்தப்படுவதை எதிர்த்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியது.
தில்லியில் உள்நாட்டு வர்த்தகர்கள் அமைப்பு CAIT தனது கடிதத்தில் தில்லியில் லாக்டவுனை நீக்குவது தொடர்பான தில்லி அரசாங்கத்தின் முடிவை வரவேற்றது. ஆனால் ஒற்றை எண் - இரட்டை எண் பார்முலாவை (odd-even formula) பயன்படுத்தும் யோசனையை எதிர்த்தது. இது டெல்லியின் வணிகத் துறைக்கு ஒருபோதும் சரி வராது என்று கூறியது.
" ஆனால் ஒற்றை எண் - இரட்டை எண் பார்முலா (odd-even formula) டெல்லியின் வணிகத் தன்மைக்கு ஒருபோதும் பொருந்தாது, ஏனென்றால் தில்லி நாட்டின் மிகப்பெரிய விநியோக மையமாக இருப்பதால், டெல்லி முற்றிலும் மாறுபட்ட வணிக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வெளியில் இருந்து வரும் சரக்கை வைத்து வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ள தில்லி வர்த்தகர்களுக்கு இது பெரும் குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் ”என்று CAIT பொதுச் செயலாளர் பிரவீன் காண்டேல்வால் கூறினார்.
ALSO READ | World Environment Day: எத்தனால் கலந்த எரிபொருள் திட்டம் குறித்து பிரதமர் அறிவிப்பு
முன்னதாக, CAIT தனது கடிதத்தில் தில்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மொத்த மற்றும் சில்லறை சந்தைகளுக்கு வெவ்வேறு வர்த்தக நேரங்களை அரசாங்கம் நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
CAIT தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், இந்த ஆனால் ஒற்றை எண் - இரட்டை எண் பார்முலா (odd-even formula) வாடிக்கையாளர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும், ஏனெனில் “அவர்கள் வாங்க விரும்பும் கடை திறந்ததுள்ளதா இல்லையா” என்பதில் தெளிவான தகவல் இருக்காது. உள்நாட்டு வர்த்தகர்கள் அமைப்பு தில்லி அரசிடம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
"கடைகள் திறந்து வர்த்தகம் தொடங்கி விட்டது என நினைக்கலாமே தவிர இதனால், உண்மையில் எந்த அளவிற்கு வணிக நடவடிக்கைகள் நடைபெறும் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது" என்று CAIT ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ | Corbevax: Biological-E தயாரிக்கும் மிக மலிவான கொரோனா தடுப்பூசி விரைவில்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR