டெல்லி மஜெண்டா மெட்ரோ சோதனை தோல்வி; 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்!!
டெல்லி மஜெண்டா மெட்ரோ ரயில் சோதனை நேற்று தோல்வியடைந்ததால் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லியில் உள்ள களிந்தி குஞ்ச் பகுதியில் நேற்று காலை சோதனைக்காக விடப்பட்ட மெட்ரோ ரெயில், டிப்போ சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மெட்ரோவின் புதிய மஜெண்டா வரிசையில் நேற்று நடந்ததுள்ளது.
இந்த புதிய மெட்ரோ வரிசையானது, போட்டானிக்கல் கார்டன் மற்றும் கல்காஜ் இடையேயான பிரயாண நேரத்தினை 52 நிமிடங்களிலிருந்து 19 நிமிடங்களுக்கு குறைக்கும் வகையினில் திட்டமிடப்பட்டது.
இதனை வரும் டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த மெட்ரோ சேவையை திறந்து வைப்பார் எனவும். அதன் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இது திறக்கப்படும் எனவும் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று, இந்த மெட்ரோ ரயில் விபத்துகுள்ளானதில், சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஊழியர்கள் 4 பேரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.