டெல்லியில் நேற்று இரவு மெட்ரோ ரயில் கதவு திறந்த நிலையில் ஓடியதால் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், டெல்லியில் கதவு திறந்த நிலையில் நேற்று மெட்ரோ ரயில் ஓடியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


டெல்லியில் உள்ள சாவ்ரி பஜார் ரயில் நிலையத்தில் இருந்து காஷ்மீரி கேட் பகுதிக்கு நேற்று இரவு 10 மணிக்கு மெட்ரோ ரயில் புறப்பட்டது. ரயில் நிலையத்தை கடந்தும் கதவுகள் மூடப்படவில்லை. அதனால் மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்தபடி இருந்தது. கதவுகள் மூடப்படாத நிலையில் மெட்ரோ ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடைந்தது.


இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்த மஞ்சள் கோடு உள்பட அனைத்தும் பதிவாகி இருந்தது. 


 



 


முன்னதாக டெல்லியில் கடந்த ஜூலை 2014 ஆண்டு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. கோதோர்னி முதல் அர்ஜங்கர் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் கதவு திறந்த நிலையில் ஓடியது என்று குறிப்பிடத்தக்கது.