தலைநகர் டெல்லியில், இன்று மீண்டும் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி பல்கலைக்கழகம், சாந்தினி சவுக், திர்பூர், உள்ளிட்ட பல பகுதிகளில், காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட அளவீட்டின்படி, சராசரியாக, காற்று மாசு 377 என்ற அளவில் பதிவாகியுள்ளது.


காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. 


இந்நிலையில் இன்று காலை நிலவரம் படி டெல்லியில் AQI தரம் 377 தாண்டியது. மேலும் நொய்டாவில் AQI 427-ம், குருகிராம் பகுதியில் AQI தரம் 394 தாண்டியது. இதனால் தேசிய தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு கடும் அவதி ஏற்பட்டுள்ளது.