புகை நகரமாய் தலைநகரம்: காற்றுமாசை கட்டுப்படுத்த ஸ்மார்ட் சைக்கிள்....
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதத்தில், ஆப் மூலம் செயல்படும் ஸ்மார்ட் சைக்கிளை நகராட்சி கவுன்சில் அறிமுகப்படுத்தி இருக்கிறது...
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதத்தில், ஆப் மூலம் செயல்படும் ஸ்மார்ட் சைக்கிளை நகராட்சி கவுன்சில் அறிமுகப்படுத்தி இருக்கிறது...
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அளவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. காற்று மாசு அளவு, இவ்வாறு அதிகளவு பதிவாவது, இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும். நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரும், காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகின்றன. ஏற்கனவே, காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி வாசிகளுக்கு, கடுங்குளிர் பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது.
குளிரான தட்பவெப்ப நிலையால், காற்று மாசு, குறைவதற்கான வாய்ப்பு முழுதாக குறைந்துள்ளது. இதனால், காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. டெல்லியில், நேற்று பதிவான காற்றின் தரக் குறியீடு 446 ஆக உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதத்தில், ஆப் மூலம் செயல்படும் ஸ்மார்ட் சைக்கிளை நகராட்சி கவுன்சில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சைக்கிளில் எல்ஈடி விளக்கு, கியர், திசையறியும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
ஏழை எளிய மக்களும் இந்த சைக்கிளைப் பயன்படுத்தும் வகையில், மணிக்கு வெறும் 10 ரூபாய் வாடகை கொடுத்து பயன்படுத்தலாம். இதற்காக டெல்லி நகராட்சியில் 25 இடங்களில் ஸ்மார்ட் சைக்கிள் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பயணத்தை முடிக்கும் நேரத்தில் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிட்டுள்ளோம் என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போது 250 சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், மேலும் 2500 சைக்கிள்களை அறிமுகப்படுத்த டெல்லி நகராட்சி திட்டமிட்டுள்ளது.