ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து, இந்த தகவலின் பேரில் நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மாநில போலீசாரின் சிறப்பு காவல் படை இன்று சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகிக்த்தின் பேரில்  3 பேரை காவல் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் பயிற்சி பெற்ற ஐந்து பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும், அவை உத்தரபிரதேசத்தில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் உளவுத்துறை வட்டார பேசப்பட்டு வந்தது. நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பஸ்தி, கோரக்பூர், சித்தார்த்நகர், குஷினகர் மற்றும் மகாராஜ்கஞ்ச் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.