புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் உட்பட பலரை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நாட்களாக போராட்டங்கள் தொடர்கின்றன.

 

இந்த நிலையில், இன்று டெல்லியில் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம் அட்மி (AAP) கட்சி எம்.எல்.ஏக்களான ராகவ் சாட்டா (Raghav Chadha), ரிது ராஜ் (Ritu Raj), குல்தீப் குமார் (Kuldeep Kumar) மற்றும் சஞ்சீவ் ஜா (Sanjeev Jha) ஆகியோரை டெல்லி போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

 

என்.டி.எம்.சி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 'மத்திய உள்துறை அமைச்சரின் (Home Minister) இல்லத்திற்கு வெளியே இன்று அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த' அனுமதி கோரிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதாவின் கோரிக்கையை டெல்லி காவல்துறை நிராகரித்தது.



"உள்துறை அமைச்சரின் வீட்டிற்கு வெளியே கூடுவதற்கோ, எந்த வகையான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கோ அனுமதி கொடுக்க முடியாது என்று டெல்லி போலீசார் (Delhi police) தெரிவித்தனர். அதையும் மீறி உள்துறை அமைச்சரின் வீட்டை நோக்கி சென்றவர்களை டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். 

Also Read | வேளாண் சட்டத்தை ஆதரித்து ஹரியானா விவசாயிகள் வேளாண் அமைச்சரிடம் கடிதம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR