புதுடெல்லி: டெல்லியின் புறநகரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்வீட் செய்ததற்காக ஸ்வீடன் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 120-பி மற்றும் 153-ஏ பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


டெல்லியின் (Delhi) எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிப்பதைக் காட்ட உதவும் வகையில் தனது சமூக ஊடக கணக்கில், நிகழ்ச்சி நிரல் போன்றதொரு மேம்படுத்தப்பட்ட கருவித்தொகுப்பை (tool kit) ஸ்வீடனின் பருவநிலை ஆர்வலர் பகிர்ந்து கொண்டார்.


இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட துன்பெர்க் புதன்கிழமை (பிப்ரவரி 3) ஒரு டூல்கிட்டைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் பின்னர் அவர் அதை நீக்கிவிட்டார். துன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.



ALSO READ: Farmer protest: வெளிநாட்டினர் பார்வையாளர்களே, பங்கேற்பாளர்கள் அல்ல, சமூக ஊடகங்களில் வைரல்


கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) பகிர்ந்து கொண்ட டூல்கிட்டில், ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு (Farmers Protest) ஆதரவைக் காண்பிப்பது குறித்த தகவல் இருந்தது. பின்னர், அவர் காலாவதியான அந்த இடுகையை நீக்கி புதுப்பிக்கப்பட்ட ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.


பிப்ரவரி 2 ம் தேதி, கிரெட்டா, இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதோடு, "இந்தியாவில் #FarmersProtest –உடன் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்" என்று ட்வீட் செய்திருந்தார். "பரபரப்பான சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மற்றும் கருத்துக்கள் மூலம் மக்களின் உணர்சிகளைத் தூண்டுவதற்கு" எதிராக புதன்கிழமை மத்திய அரசு (Central Government) எச்சரிகை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள விவசாயிகளில் மிகச் சிறிய அளவு விவசாயிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் மத்திய அரசு நினைவூட்டியது.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ட்வீட் செய்து, “எந்தவொரு பொய் பிரச்சாரத்தாலும் இந்தியாவின் ஒற்றுமையைத் தடுக்க முடியாது! எந்தவொரு பிரச்சாரமும் இந்தியா புதிய உச்சிகளை அடைவதைத் தடுக்க முடியாது! பிரச்சாரத்தால் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது. அதை இந்தியாவின் முன்னேற்றம்தான் தீர்மானிக்கும். முன்னேற்றத்தை அடைய இந்தியா ஒற்றுமையாக ஒன்றிணைந்து நிற்கிறது” என்று கூறினார்.


ALSO READ: #GretaThunbergExposed: உலகளாவிய பிரச்சாரக் குழுவில் சேர்ந்து இந்தியாவை அவதூறு செய்யும் கிரெட்டா துன்பெர்க்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR