நாளை பதவியேற்ப்பு! டெல்லியில் போக்குவரத்து மாற்றம்!!
நாளை பதவியேற்ப்பு நிகழ்ச்சி முன்னிட்டு டெல்லியில் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை பதவியேற்ப்பு நிகழ்ச்சி முன்னிட்டு டெல்லியில் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை தவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.
இந்த நிலையில், டெல்லியில் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவித்துள்ள போக்குவரத்து காவல்துறை,
நாளை, ராஜ்காட் சவுக், டெல்லி கேட் சவுக், நேதாஜி சுபாஷ் மார்க், அஜ்மீர் கேட் பகுதிகளில் பஸ்கள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல அனுமதியில்லை. மேலும், கார் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளது. விழாவிற்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ராம்லீலா மைதானத்திற்கு எதிர்புறம் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தவிர எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்காத நிலையில், விழாவில், ஆம்ஆத்மி அரசு நடைமுறைப்படுத்திய ஜெய் பீம் திட்டம், மொகில்லா கிளினிக் டாக்டர்கள், பைக் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட திட்டங்களில் பயனடைந்தவர்கள் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட உள்ளது.