இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றார் பிரதமர் மோடி!
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார்!
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார். சீனாவின் குயிங்டோ நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நாள் சுற்றுப்பயணத்தின் போது மோடி, சீனா அதிபர் ஸி ஜிங்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சீனாவில் இருக்கும் முக்கிய அருவிகளும், ஏரிகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த சந்திப்பில் போது, இந்திய சீனா எல்லைப்பிரச்சனை குறித்து பேசப்பட இருக்கிறது.
டோக்லாம் பகுதியில் சீனா எல்லை மீறுவது குறித்தும், இரண்டு நாடுகளும் எல்லையில் சண்டையிட்டுக் கொள்வது குறித்தும், இதில் விவாதம் செய்யப்பட இருக்கிறதாம். அதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களின் வர்த்தகம் குறித்தும் இதில் பேசப்பட இருக்கிறது. மேலும், இந்த மாநாட்டிற்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் மோடி சந்தித்து உரையாடுவார் என்று கூறப்படுகிறது.