புது தில்லி: யமுனை ஆற்றின் (Yamuna River) நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் 204 மீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எச்சரிக்கை அளவான 204.50 மீட்டருக்கு மிக அருகில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் (Hathnikund Barrage) இருந்து காலை 10 மணிக்கு வினாடிக்கு 7,418 கன மீட்டர் (cusec) என்ற விகிதத்தில் ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஒரு கியூசெக் வினாடிக்கு 28.317 லிட்டருக்கு சமமாகும்.


காலை 8 மணி மற்றும் காலை 9 மணிக்கு ஓட்ட விகிதம் ஒரே மாதிரியாக இருந்தது என்று அந்த அதிகாரி கூறினார்.


ALSO READ: மும்பை மழை அப்டேட்: பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்


ஆற்றின் நீர்மட்டம் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு 204.38 மீட்டரில் பதிவாகியுள்ளது.


பொதுவாக, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நீரின் ஓட்ட விகிதம் 352 கியூசெக் ஆக இருக்கும். ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக இது அதிகரித்துள்ளது.


கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 18-19 தேதிகளில் ஓட்ட விகிதம் 8.28 லட்சம் கியூசாக உயர்ந்தது. மேலும் யமுனையின் நீர் மட்டம் 206.60 மீட்டர் என்ற இலக்கை எட்டியது. இவ்வகையில் 205.33 மீட்டர் என்ற அபாய அளவு மீறப்பட்டது.


நிரம்பி வழிந்த நதி பல தாழ்வான பகுதிகளை மூழ்கடித்த பின்னர், தில்லி அரசு (Delhi Government) வெளியேற்றம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டெல்லி நீர்வள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (Satyendar Jain) திங்களன்று வெள்ளம் போன்ற எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


"எங்களிடம் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு தயாராக உள்ளது. அதற்கான தேவை எற்பட்டால் அது செயல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார். யமுனை ஆற்றங்கரையில் உள்ள, பல்லா கிராமம் முதல் ஓக்லா வரை அனைத்து பகுதிகளுக்கும் அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை தயாராக வைத்துள்ளது என்று அவர் கூறினார்.


கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்ததால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது. ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 29 வரை வடமேற்கு இந்தியாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.


ALSO READ: பலத்த மழைக்கான எச்சரிக்கை: மகாராஷ்டிராவின் பல இடங்களுக்கு Orange Alert!!