புது டெல்லி கடுமையான குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அதிக நிலை குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. அந்தவகையில் இன்று கடும் குளிர் நிலவுகிறது. நகரின் பல பகுதிகளில் 'கடுமையான குளிர் நிலவுவதாக' வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.


 



 


இதற்கிடையில், தேசிய தலைநகரில் காற்றின் தரம், கடந்த இரண்டு மாதங்களிலிருந்து பெரும்பாலும் 'கடுமையான' அல்லது 'மிகவும் மோசமான' பிரிவின் கீழ் சென்றுள்ளது., எனினும் சற்று தலைகாட்சி சென்ற மழையில் காரணமாக, காற்றின் வேகம் அதிகரித்த பின்னர் அதன் தரம் மிகவும் மேம்பட்டது. 


டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் அவதியுறுகின்றனர். குளிர் தாங்க முடியாத மக்கள் சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்தனர். கடுங்குளிரால் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 


டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகள் கடந்த வாரம் மிதமான முதல் அதிக மழை பெய்தன, இது குளிர் காலநிலைக்கு வழிவகுத்தது. கடந்த 16 ஆண்டுகளில் கடந்த திங்கள் கிழமைதான் மிகக் குளிர்ந்த டிசம்பர் நாளை டெல்லி நகரம் அனுபவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.