டெல்லியில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதால் மண்டி ஹவுஸ் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு (Citizenship Amendment Act) எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் என்.ஆர்.சி சட்டத்துக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில் அஸ்ஸா உடபட வடகிழக்கு மாநிலத்தில் ஆரம்பித்த போராட்டம், பிறகு டெல்லியில் மாணவர்கள் CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போரட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அதன்பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, CAA-NCR  சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளம் மற்றும் தமிழ் நாடு என பல மாநிலங்களில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதால், ஜாமியா நகர் பகுதியில் ஏற்பட்ட போராட்டம் இன்னும் அமைதியடையவில்லை. ஜாபராபாத் மற்றும் சீலாம்பூர் பகுதிகளில் இரண்டு மணியளவில் வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது.


இந்தநிலையில், நேற்று முன்தினம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக (BJP) சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் உரையாற்றிய பிரதமர் மோடி, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் கருத்துத் தெரிவித்த அவர், உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்து மக்கள் தூண்டிவிடுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. குடியுரிமைச் திருத்த சட்டம் குறித்து ஒருசில கட்சிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக மத்திய அரசு 1.5 கோடி வீடுகளை கட்டித் தந்துள்ளதாகவும், அவர்களிடம் மதம் குறித்து கேட்டதில்லை எனவும், குடியுரிமைச் சட்டத்திருத்தம் இந்திய குடிமகன் யாரையும் பாதிக்காது எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்திய மக்களின் நலனுக்காக குடியுரிமைச் திருத்த சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.


இந்நிலையில் தற்போது டெல்லி மண்டி ஹவுஸ் பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெற்றிடக்கூடாது 
என்பதால் அப்பகுதியில் போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


 



 



 


 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.