புதுடெல்லி: டெல்லி நேரு பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போலீசாருக்கும், குற்றவாளி கும்பலுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் பல நாட்களாக, பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி அக்பர். இவரது தலைக்கு ரூ.25,000 பரிசையம் போலீசார் அறிவித்திருந்தனர். 


இந்நிலையில் அக்பர் தனது கூட்டாளிகளுடன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 


இதனையடுத்து அக்பரை சுற்றி வளைத்து பிடிப்பதற்காக போலீசார் சென்ற போது, அங்கு மறைந்திருந்த அக்பர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதில் போலீசாருக்கும், அக்பர் தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.


சுமார் 13 ரவுண்ட் துப்பாக்கி குண்டுகள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக அக்பர் தப்பிக்க முயன்ற போது போலீசார் அவனை உயிருடன் சுட்டுப்பிடித்துள்ளனர். இருப்பினும் அக்பரின் கூட்டாளி தப்பி ஓடி விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசார் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.