டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருவதாக கூறி, கடந்த 7-நாட்களாக ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், சில அமைச்சர்களும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.


இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் கூற்றுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது,,!


அதிகாரி மணிஷா சக்சேனா கூறியதாவது: ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய். அனைத்து துறையிலும் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறோம். விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகிறோம். தலைமை செயலர் தாக்கப்பட்டது அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. பணிகள் எதுவும் தடைபெறவில்லை.