டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு
இன்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
டெல்லியில் தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் பச்சைக்கலர் துண்டு அணிந்து கொண்டு விவசாயிகளுடன் அமர்ந்து குறைகள் கேட்டறிந்தார்.
முன்னதாக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.