டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு
டெல்லியில் 18 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் போராட்டம் பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய எந்த அரசும் தயாரில்லை. காப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை. மீத்தேன், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் என பல பிரச்னைகள் உள்ளன. தமிழக அரசு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என அவர் கூறினார்.
தமிழக விவசாயிகள் எலிக்கறி, பாம்புக் கறி, வாயில் கறுப்பு துணி கட்டுதல், தூக்கு கயிறு மாட்டுதல் போன்ற பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.