குலாம் நபி ஆசாத் யூரி கருத்தை மீது மாநிலங்களவை காங்கிரஸ் மற்றும் பாஜக மோதல். தொடர் அமளியால் பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய முதல எதிர்க்கட்சிகள் பார்லிமென்டின் இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் வாபஸ் பெற எனவும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகலும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன. 


இந்நிலையில் இன்று 3_வது நாளாக அவை கூடியதும், ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து அமளி ஏற்பட்டது. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி வந்து ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து விவாதத்தில் பங்கேற்று விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. 


அதேபோல லோக்சபாவிலும் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால், லோக்சபா வரும் திங்கட்கிழமை(21-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டது.


ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், விவாதம் மட்டுமே போதும் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை.


மேலும் நேற்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை தீவிரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார். ராஜ்யசபாவில் தீவிரவாத தாக்குதலுடன் அரசின் கொள்கையை ஒப்பிட்ட பேசிய குலாம் நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க கூறியுள்ளது. ஆனால் இதனை ஏற்க ஆசாத் மறுத்து விட்டார்.


இந்நிலையில், பார்லிமென்டில் அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, ஆனந்த் குமார், வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.