புதுடெல்லி: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ருப்பை மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பினால் சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனை செய்யும் நபர்கள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றனர். அரசு அங்கீகாரம் இல்லாமல் தொழில் செய்து வங்கிக் கணக்குகளை பயன்படுத்தாமல் பல லட்சம் ரொக்கமாக வைத்திருப்போர், அந்த பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு வகையில் கையாள்கின்றனர். இதனை முறியடிக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வோரிடம் கறுப்புப் பணம் இருப்பதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து ஹவாலா டீலர்கள் மற்றும் பிற நபர்களிடம் கறுப்பு பண புழக்கத்தை தடுக்கும் முயற்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் சோதனை நடத்துகின்றனர்.


சுமார் 100-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதி போலீஸ் உதவியுடன் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.